வார விடுமுறையொட்டி இராமேஸ்வரத்திற்கு குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
ராமேஸ்வரம், 23 மே (ஹி.ச.) தீர்த்த மூர்த்தி ஸ்தலம் இப்படி முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் பல்லார்க்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமாக இருந்
புனித நீராடல்


ராமேஸ்வரம், 23 மே (ஹி.ச.)

தீர்த்த மூர்த்தி ஸ்தலம் இப்படி முப்பெருமைகளை கொண்ட ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் பல்லார்க்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது, இங்கே வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், தங்களின் பாவங்களைப் போக்க பரிகார பூஜை செய்வதற்காகவும் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் இன்று வார விடுமுறை மற்றும் பள்ளி கல்லூரிகள் ஆண்டு விடுமுறையொட்டி, காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனனர், வருகை தந்த பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, பின்பு பரிகார பூஜைகள் செய்துவிட்டு, தீர்த்தக்கரையில் குளித்த பின்னர், கோவிலுக்கு உள்ள 22 புண்ணிய திருத்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி வருகின்றனர், அவனைத் தொடர்ந்து ராமநாதசாமி மற்றும் ஸ்ரீபர்வதவர்த்தினி ஆம்பளை பல மணி நேரம் காத்திருந்து தரிசித்து வருகின்றனர்,

மேலும் தனுஷ்கோடி இராமர்பாதம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ராமேஸ்வரம் முக்கிய பகுதிகளில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கூடுதல் போக்குவரத்து காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டு போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam