Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 23 மே (ஹி.ச.)
ஹைதராபாத் நகரில் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்த இரு ரௌடீஷீட்டர் சகோதரர்கள் மீது ‘பிரிவென்டிவ் டிடென்ஷன்’ (பி.டி.) சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் வெளியிட்ட தகவலில் கூறியதாவது:
ரெயின்பஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒமர் பின் ஹன்ஜா அல் ஜாப்ரி மற்றும் அலி பின் ஹன்ஜா அல் ஜாப்ரி ஆகிய சகோதரர்கள் கடந்த சில காலமாக கொலை, கொலை முயற்சி, கட்டாய வசூல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஒமர் மீது 8 வழக்குகளும், அலி மீது 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட இவர்கள், ஜாமினில் வெளியே வந்த பின்னரும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக ரெயின்பஜார் போலீசார் அறிக்கை அளித்தனர்.
இந்த அறிக்கையை பரிசீலித்த பிறகு, இருவர்மீதும் பி.டி. சட்டம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, போலீசார் இருவரையும் கைது செய்து சஞ்சல்குடா மத்திய சிறை
சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA