சூலூர் சிறுமி கொலை குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தமிழ்நாடு, 23 மே (ஹி.ச.) கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவ
டிடிவி


தமிழ்நாடு, 23 மே (ஹி.ச.)

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு, உடல் குளக்கரையில் வீசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த வேதனையளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமல்லாமல் சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, சமரசமற்ற முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P