Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 24 மே (ஹி.ச)
சி.பா.ஆதித்தனார் அவர்களின் 45-ஆம் நினைவு நாளை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவருக்கு தனது வணக்கங்களையும் மரியாதையையும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் தமிழர் நலன் சார்ந்த வரலாற்றை சி.பா.ஆதித்தனாரை விலக்கி வைத்து எழுத முடியாது என்றும், தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ்மக்களின் முன்னேற்றத்திற்கும் அவர் ஏராளமான பணிகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தினத்தந்தி நாளிதழை தொடங்கி அதன் வாயிலாக தமிழர்களின் குரல்களை எதிரொலிக்கச் செய்தவர் சி.பா.ஆதித்தனார் என்றும், அவரது நினைவு நாளில் அவரது இதழியல் மற்றும் மக்கள் பணிகளை போற்றுவதுடன், அவற்றை தொடர உறுதியேற்போம் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ