18-வது வயதில் அரியணை ஏறிய அலெக்சாண்ட்ரினா விக்டோரியா
தமிழ்நாடு, 24 மே (ஹி.ச.) அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா என்பவர், 1837 முதல் 1901 வரை கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை ஆண்ட ராணியும், 1876 முதல் இந்தியாவின் பேரரசியும் ஆவார். இவர் தனது 18-வது வயதில் அரியணை ஏறினார். 63 ஆண்டுக
க


தமிழ்நாடு, 24 மே (ஹி.ச.)

அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா என்பவர், 1837 முதல் 1901 வரை கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தை ஆண்ட ராணியும், 1876 முதல் இந்தியாவின் பேரரசியும் ஆவார்.

இவர் தனது 18-வது வயதில் அரியணை ஏறினார்.

63 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் நீடித்த இவரது ஆட்சி, பிரிட்டிஷ் வரலாற்றில் மிக நீண்ட ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும்

இவரது ஆட்சிக்காலம் தொழில் புரட்சியின் உச்சக்கட்டமாகவும், பிரித்தானியப் பேரரசு உலகளாவிய வல்லரசாக விரிவடைந்த பொற்காலமாகவும் அறியப்படுகிறது.

இக்காலத்தில் சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருமளவில் ஏற்பட்டன

இந்தியாவின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது.

இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.

ஐரோப்பாவின் பாட்டி' எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 1901ஆம் ஆண்டு மறைந்தார்.

Hindusthan Samachar / Durai.J