Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி , 24 மே (ஹி.ச.)
திருப்பதி தேவஸ்தானம் (TTD) முன்னாள் தலைவர் மற்றும் ஒய்எஸ்ஆர்சி கட்சி தலைவர் பூமனா கருணாகர் ரெட்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஹிந்து அமைப்புகள் மற்றும் சாதுக்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் போராட்டக்காரர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைதியான போராட்டத்தை தடுத்ததாக ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்த சம்பவம் குறித்து ஒரு முக்கிய சாதுவார் கூறுகையில்,
திருமலை என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட புனித தலம். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளுடன் அது தொடர்புடையது.
இரண்டு முறை TTD தலைவராக இருந்தும், பூமனா கருணாகர் ரெட்டி திருமலையை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அவர் தனது கருத்துகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், வெங்கடேஸ்வர சுவாமியிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், சாதுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஒய்எஸ்ஆர்சி கட்சி நிர்வாகிகள் மீது ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
சம்பவ இடத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
திருப்பதியில் நிலைமை பதற்றமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA