Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 24 மே (ஹி.ச.)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம், வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய நடவடிக்கையில் அவர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் மாவட்ட நிர்வாக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அரக்கோணம் கோட்டாட்சியர் ரமேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN