Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 24 மே (ஹி.ச.)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்திகாடு பகுதியில், கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை எல். முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர்,
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
மாநில அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து, குற்றவாளிகளுக்கு ஓரிரு மாதங்களில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam