Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 24 மே (ஹி.ச)
விழுப்புரம் மாவட்டம் பணங்குப்பத்தைச் வெளியூர் சென்றிருந்த நிலையில், நேற்று இரவு வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
பீரோவில் இருந்த ரூ.25,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசு, காப்பு உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இன்று காலை வீடு திரும்பிய சங்கர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், சங்கரின் வீட்டில் கொள்ளையடித்த அதே நபர்கள், அருகிலுள்ள வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டில் ஆட்கள் இருந்ததால் கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைகளை சேகரித்தனர்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் பணங்குப்பம் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b