சென்னை விமான நிலைய செக்யூரிட்டி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை, 24 மே (ஹி.ச.) சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய இயக்குனர் அலுவலகம், மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகியவைகள் அடங்கியுள்ளன. அங்கு இரண்டாவது தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அந்தப் பகு
Death


சென்னை, 24 மே (ஹி.ச.)

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமான நிலைய இயக்குனர் அலுவலகம், மற்றும் நிர்வாக அலுவலகம் ஆகியவைகள் அடங்கியுள்ளன.

அங்கு இரண்டாவது தளத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அந்தப் பகுதிகளை யூபிஎன்எல் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம், பாதுகாப்பு பணிகளுக்கு செக்யூரிட்டி காவலர்களை பணியில் அமர்த்தி செயல் பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் காந்தி கன்னியப்பன் (57). முன்னாள் ராணுவ வீரரான இவர், இந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம், சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டி பாதுகாவலராக 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் காந்திக்கு நேற்று இரவு பணியாக, சென்னை விமான நிலைய அட்மின் பில்டிங் எனப்படும் நிர்வாக அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர் வழக்கம் போல் நேற்று மாலை 6 மணிக்கு இரவு பணிக்காக வந்தார்.

இவர் இரவு இரண்டாம் களத்தில் அவர் பணியிடம் உள்ள ஒரு அறையில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு, இவரை பணி மாற்றம் செய்வதற்காக, மற்றொரு செக்யூரிட்டி அந்தப் பகுதிக்கு பணிக்கு வந்தார். ஆனால் காந்தியை காணாமல் தேடினார். அப்போது அவர் அங்குள்ள ஒரு அறையில் பேன் கொக்கியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.

இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பார்த்தபோது, காந்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதை அடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலைய செக்யூரிட்டியாக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி, பணி செய்யும் சென்னை விமான நிலையத்துக்குள்ளையே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? பணியிடத்தில் ஏதாவது பிரச்சனையா? இல்லையேல் குடும்பத்துக்குள் ஏதாவது பிரச்சனையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்திற்குள் செக்யூரிட்டி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN