Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 மே (ஹி.ச.)
“COCKROACHES NEVER DIE” என்ற வாசகத்துடன், ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அதன் அட்மின் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கும், தனது தனிப்பட்ட இன்ஸ்டா கணக்கும் ஹேக் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து தொழில்நுட்ப முயற்சிகளின் மூலம் அந்த கணக்குகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் எனது தனிப்பட்ட இன்ஸ்டா கணக்கும் ஹேக் செய்யப்பட்டது. இப்போது நாங்கள் மீண்டு வந்துவிட்டோம் என அபிஜீத் திப்கே தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், “COCKROACHES NEVER DIE” என்ற வாசகத்தை பயன்படுத்தி, எதிர்ப்புகளையும் சவால்களையும் தாண்டி மீண்டும் செயல்பாட்டுக்கு திரும்பியுள்ளோம் என்ற கருத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இந்த பதிவு வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதள பயனர்கள் பலரும் வாழ்த்து மற்றும் ஆதரவு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கணக்கு ஹேக்கிங் தொடர்பான காரணம் அல்லது யார் பின்னணியில் இருந்தனர் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / VINOTH KUMAR P