தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்வு
தூத்துக்குடி, 24 மே (ஹி.ச.) தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்களு
தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்வு


தூத்துக்குடி, 24 மே (ஹி.ச.)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள், கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் பாடு இல்லாததால் குறைந்தளவு மீன்களுடனே கரைக்கு திரும்பி வந்தனர்.

இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க துறைமுகத்தில் குவிந்தனர்.

வரத்து குறைவான நிலையிலும் இன்று காலை முதல் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலையும் கடந்த வாரத்தை போன்று உயர்ந்தே காணப்பட்டது.

கடந்த வாரம் விற்பனையானது போன்றே சீலா மீன் கிலோ ரூ.1,300 முதல் 1,600 வரை விற்பனையானது.

ரூ.500 முதல் 700 வரை விற்பனையான விளைமீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் 750 வரையும், ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனையான ஒரு கூடை சாளை மீன் ரூ.2500 வரையும் விற்பனையாகிறது.

மேலும் குறுவளை மீன் கிலோ ரூ.500 வரையும், கேரை மற்றும் சூறை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்பனையானது. ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி ஆகிய மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.

விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர். மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b