Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 24 மே (ஹி.ச.)
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆப் சுற்றுக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய லக்னோ அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோஸ் (72), பட்டோனி (43) ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை மீட்டனர். கடைசியில் அப்துல் 37 ரன்கள் சேர்த்ததால், 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.
ஆனால் பிரபா சிமான் சிங் (69) மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து அதிரடி காட்டினர்.
கேப்டன் ஐயர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இந்த தொடரில் அவரது முதல் சதமாகும்.
இதனால் பஞ்சாப் அணி 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப் அணி, பிளே-ஆப் வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA