சட்டசபையில் முடிவை அறிவிக்கும் போது நான் எவ்வாறு நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும் - ஜேசிடி பிரபாகர்
சென்னை, 24 மே (ஹி.ச) சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,
Raj


சென்னை, 24 மே (ஹி.ச)

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்,

மற்றும் ஜேசிடி பிரபாகர்,

அவருடைய கல்வி குடும்பத்திற்கு மட்டுமல்ல, ஊடக குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கெல்லாம் தந்தை ஆதித்தனார் நினைவை நெஞ்சில் ஏந்துகிறோம்.

உலகெங்கும் ஊடகத்தை கொண்டு சென்றவர். உலகத்தை ஊடகத்தில் காட்டியவர், ஊடகத்தை உலகுக்கு காட்டியவர் என்றார்.

மேலும், எழுத்து உலகமும், ஊடக உலகமும், அரசியல் உலகமும் வெற்றி நடை போடட்டும் என்றும் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

ஆட்சிக்கு வராது என்றும் சொன்னார்கள், ஆனால் நாங்கள் ஆட்சி அமைத்துவிட்டோம். இந்த ஐந்து ஆண்டுகள் மட்டும் அல்ல, 50 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறினார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நேற்றைய சம்பவத்திலும் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

காங்கிரஸ் கட்சியை நம்பக்கூடாது என்றும், கூட்டணியை மாற்றிவிட்டதாகவும் திமுக விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு ,

கூட்டணியில் உள்ள கட்சிகளை அடிமை கட்சிகள் போல நடத்தும் பண்ணையார் மனப்பான்மை கொண்டவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள்.

எந்தக் கட்சியுடன் இருக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைவரும் தொண்டர்களும் எடுக்க வேண்டிய முடிவு.

மாபெரும் இயக்கத்தை சிறுமைப்படுத்தி பேசுவது சரியல்ல என்று தெரிவித்தார்.

அதிமுக சட்டமன்ற கொறடா தேர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

நான் நடுநிலையாக செயல்படுகிறேனா இல்லையா என்பதை நான் தீர்ப்பு வழங்கும் போது இந்த நாடே தெரிந்து கொள்ளும்.

குற்றம் சாட்டுபவர்களும் அறிந்து கொள்வார்கள் என்றார்.

மேலும், இரு வேறு குழுக்களாக உள்ள அதிமுகவின் இரு தரப்பினரும் மனுக்களை அளித்துள்ளனர்.

அவை என் ஆய்வில் உள்ளன. உரிய நேரத்தில் சட்டசபையில் முடிவை அறிவிக்கும் போது நான் எவ்வாறு நியாயமாக நடந்துகொண்டேன் என்பதை நாடு தெரிந்து கொள்ளும் என்றும் கூறினார்.

Hindusthan Samachar / P YUVARAJ