கொடைக்கானலில் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலா பயணிகள் அவதி
திண்டுக்கல், 24 மே (ஹி.ச.) கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகைபுரிந்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெ
கொடைக்கானல்


திண்டுக்கல், 24 மே (ஹி.ச.)

கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகைபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில்

தரைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வெட்பம் காரணமாக அவற்றில்

இருந்து தப்பித்து கொள்ள மலை பிரதேசமான கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா

பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று காலை 8 மணி முதல் இரவு 11 வரை தொடர்ந்து மலைச்சாலைகளில்

ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக காலை முதலே பிரதான சாலைகளில்

வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் நிலை

ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கல்லறை மேடு, சீனிவாசபுரம், உகர்தே நகர் மூஞ்சிக்கல், ஏரி சாலை

உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்து

காணப்படுகிறது.

மேலும் ஆங்காங்கே காவலர்கள் போக்குவரத்தை சரி செய்து வந்தாலும் , சீசன்

நேரத்தில் இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து

வருகிறது.

மேலும் குறுகிய மலைசாலைகளில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள

நிலையில் அவற்றை சரி செய்தால் மட்டுமே இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யமுடியும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam