Enter your Email Address to subscribe to our newsletters

நியூயார்க் , 24 மே (ஹி.ச.)
ஈரானுடன் ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தின் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி உரையாடல்கள் நடத்தினர்.
இதனை தொடர்ந்து டிரம்ப், போர் தொடர்பாக ஈரானுடனான ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உள்ளிட்டவை ஈரானுடன் பெருமளவில் பேசி முடிக்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின் இறுதி அம்சங்கள் மற்றும் விவரங்கள் தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன, விரைவில் அறிவிக்கப்படும் என்று டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். ஆனால் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும், தனியாக இஸ்ரேலுடனும் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
இதை அமைதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று விவரித்த டிரம்ப், அமெரிக்கா, ஈரான் மற்றும் உரையாடல்களில் பங்கேற்ற பிற நாடுகளால் இது இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.
இஸ்லாமிய குடியரசு மீது புதிய சுற்று தாக்குதல்களை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வந்த ஒரு வாரத்தின் இறுதியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. அவற்றை பின்னர் விவாதிக்க ஈரான் விரும்புகிறது. ஈரான் அல்லது இஸ்ரேல் தரப்பில் இருந்து உடனடியாக எந்த கருத்தும் வெளியாகவில்லை.
அமெரிக்காவை போருக்கு செல்ல வலியுறுத்திய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான பேச்சுவார்த்தை மிக நன்றாக நடந்ததாக டிரம்ப் கூறினார்.
அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b