அமைச்சர் செங்கோட்டையன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
கோவை, 24 மே (ஹி.ச.) உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அமைச்சர் செங்கோட்டையன் சிகிச்ச
செங்கோட்டையன்


கோவை, 24 மே (ஹி.ச.)

உடல் நலக்குறைவு காரணமாக தமிழக அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அமைச்சர் செங்கோட்டையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், தற்போது அமைச்சர் செங்கோட்டையனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைச்சர் உடல்நலக்குறைவு தொடர்பான தகவல் வெளியாகியதையடுத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

மேலும், அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam