ஆப்பிரிக்க பயணத்தை தவிர்க்கவும் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
புதுடெல்லி , 24 மே (ஹி.ச.) உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், உடலின் முக்கிய உறுப்புகளை தாக்கி கடுமையான நோயை ஏற்படுத்தும் தன்மை கொ
N


புதுடெல்லி , 24 மே (ஹி.ச.)

உகாண்டா, காங்கோ, சூடான் உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ், உடலின் முக்கிய உறுப்புகளை தாக்கி கடுமையான நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

எபோலா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து,மருத்துவ வல்லுநர்கள் தெரிவிப்பதாவது,

நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

ஆனால் முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு அபாயம் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

மேலும், இது குறித்து உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நோய் குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது,

காங்கோ, உகாண்டா, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA