Enter your Email Address to subscribe to our newsletters

ஷீரடி , 24 மே (ஹி.ச.)
அகில்யாநகர் மாவட்டம் ஷீரடியில் 200 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலை மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியதாவது:–
ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமே இந்தியா பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.
அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் உலகிலேயே அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவாகும்.
இதை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
பாதுகாப்பு துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை 50 சதவீதமாக உயர்த்துவதே மத்திய அரசின் முக்கிய இலக்காகும்.
பாதுகாப்புத்துறையில் தனியார் நிறுவனங்கள் வெறும் நட்டுகள், போல்ட்கள் போன்ற உற்பத்திகளுக்காக மட்டும் இல்லாமல், அதிநவீன ஆயுத அமைப்புகளையும் தயாரிக்கும் திறன் பெற்றவை.
மத்திய அரசின் தொலைநோக்கு பார்வையும், தனியார் துறையின் புதிய கண்டுபிடிப்புகளும் ஒன்றிணைந்தால், நாடு புதிய உச்சங்களை அடையும்.
இந்தியாவை வெடிமருந்துகள் மற்றும் ஆட்டோமேஷன் துறைகளின் உலகளாவிய மையமாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA