Enter your Email Address to subscribe to our newsletters

உதகை, 24 மே (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா-வில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர் அலங்காரங்கள், அரிய வகை மலர்கள் மற்றும் வண்ணமயமான தோட்ட வடிவமைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் தொட்டிகள், 275-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் மற்றும் லட்சக்கணக்கான மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மலர் சிற்பங்கள், வண்ண அலங்காரங்கள் மற்றும் செல்பி பாயிண்டுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதனால் உதகை நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் மலர் கண்காட்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam