பழனி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா - பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்
திண்டுக்கல், 24 மே (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே பழனி சண்முக நதி மற்றும் இடும்
Palani


திண்டுக்கல், 24 மே (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே பழனி சண்முக நதி மற்றும் இடும்பன்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள், மலைக்கோயிலுக்கு ஏறுவதற்காகக் கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகளில் குவியத் தொடங்கினர். மேலும் பழனி அடிவாரம் பகுதிகளில் தீர்த்த குடங்கள் எடுத்தும், காவடி எடுத்து அரோகரா கோஷங்களோடு ஆடியும் பாடியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

மேலும் மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், கட்டண தரிசனம், பொதுத் தரிசன வரிசைகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட வேண்டிய சூழல் நிலவுகிறது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகர் முழுவதும் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்யவும் மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் கோவில் நிர்வாகம் செய்துள்ளது

Hindusthan Samachar / ANANDHAN