Enter your Email Address to subscribe to our newsletters

பெரம்பலூர், 24 மே (ஹி.ச.)
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக லலித் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் 28-வது காவல் கண்காணிப்பாளராக அவர் பதவியேற்ற நிலையில், காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு புதிய காவல் கண்காணிப்பாளரை வரவேற்றனர்.
இதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த லலித் குமார், தற்போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.பி.பி.எஸ். படித்துள்ள லலித் குமார், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், ரவுடிசம் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சிறப்பாக செயல்பட்டது என்று மக்கள் பெருமைப்படும் வகையில் பணியாற்றுவேன்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறை முழு கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN