விசாகப்பட்டினத்தில் பண்டாரு தத்தாத்திரேயா சுயசரிதை நூல் வெளியீடு
விசாகப்பட்டினம், 24 மே (ஹி.ச.) முன்னாள் ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயா அவர்களின் சுயசரிதை நூல் ‘மக்களின் கதையே என் சுயசரிதை’ விசாகப்பட்டினத்தில் மிகுந்த விமரிசையாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில்,நகரின் மத்திலபாலேம் பகுதியில் உள்ள காகத்தியா கன்வென்
A


விசாகப்பட்டினம், 24 மே (ஹி.ச.)

முன்னாள் ஆளுநர் பண்டாரு தத்தாத்திரேயா அவர்களின் சுயசரிதை நூல் ‘மக்களின் கதையே என் சுயசரிதை’ விசாகப்பட்டினத்தில் மிகுந்த விமரிசையாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில்,நகரின் மத்திலபாலேம் பகுதியில் உள்ள காகத்தியா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஒடிசா மாநில ஆளுநர் கம்பம்பாட்டி ஹரிபாபு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து,அவர் பேசுகையில், சாதாரண மக்களிடமிருந்து உயர்ந்து ஆளுநர் பதவியை அடைந்த தத்தாத்திரேயாவின் வாழ்க்கைப் பயணம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.சி சோமு வீரராஜு, முன்னாள் எம்.பி ஜிவிஎல் நரசிம்மராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நூலை வெளியிட்டனர்.

இதையடுத்து பேசிய பண்டாரு தத்தாத்திரேயா, தனது அரசியல் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களும், மக்களின் ஆசீர்வாதங்களுமே தன் வலிமை என தெரிவித்தார்.

மக்களுடன் கொண்டுள்ள நெருக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நூலுக்கு பெயர் சூட்டியதாகவும் அவர் கூறினார்.

ஐந்து தசாப்தங்களாக நீண்ட அவரது அரசியல் பயணத்தை பதிவு செய்துள்ள இந்த நூல், வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA