திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்- 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
தூத்துக்குடி, 24 மே (ஹி.ச.) அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-ல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திரு
திருச்செந்தூர்


தூத்துக்குடி, 24 மே (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்-ல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்றுள்ள இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

தற்போது பள்ளி கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தர்கள் கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் காரணமாக கோவில் வளாகம் திருவிழா காலத்தைப் போல காட்சியளித்தது.

மேலும் திருச்செந்தூர் நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam