Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மே (ஹி.ச.)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல் மற்றும் தரிசன தாமதம் தொடர்பாக கோவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பக்தர்கள் தற்போது விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை கோவிலில் விரைவில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் முறையாகவும் விரைவாகவும் தரிசனம் செய்ய தேவையான புதிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், குறிப்பாக பௌர்ணமி, விடுமுறை நாட்கள் மற்றும் விழாக்காலங்களில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் நீளுவது குறித்து பக்தர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்துவந்தனர்.
இந்த சூழலில், அமைச்சர் ரமேஷின் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
விரைவில் மேற்கொள்ளப்பட உள்ள ஆய்வுக்குப் பிறகு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தரிசன முறையை மேலும் சீரமைக்கவும் புதிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P