Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 24 மே (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் அருகே உள்ள பகுதியில் கபடி போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த கவின் பாண்டியன் என்ற மாணவன் மின் கம்பத்தில் தோரணம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மாணவன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த கவின் பாண்டியன் சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த அம்மாபட்டி போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN