கொடூர கொலை சிறுவனின் ரத்தம் மதுரை கோவில் மண்ணில் சிந்திக்கிடக்கிறது- அண்ணாமலை..!
மதுரை, 25 மே (ஹி.ச.) மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை


மதுரை, 25 மே (ஹி.ச.)

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பகிர்ந்த அவர்,

சிறுவன் கொலை செய்யப்பட்ட இடத்தில் ரத்தக்கறைகள் இன்னும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு மற்றும் காவல்துறை நிலைமையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

மேலும், “கடந்த சம்பவங்களில் இருந்து காவல்துறை எந்தப் பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. புதிய தவெக அரசு இன்னும் கொண்டாட்ட மனநிலையிலேயே இருந்து கொண்டு, நிலத்தில் நடைபெறும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள தவறி வருகிறது” என்றும் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam