மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்!
கன்னியாகுமரி, 25 மே (ஹி.ச.) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள பகுதியில் வசித்து வந்த செந்தில் குமார் மற்றும்
Aralvaimozhi Police Station


கன்னியாகுமரி, 25 மே (ஹி.ச.)

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள பகுதியில் வசித்து வந்த செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா ஆகியோருக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார், மனைவி சுனிதாவை அரிவாளால் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சுனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் செந்தில் குமார் தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குடும்பத் தகராறே இந்த கொலை மற்றும் தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN