டெல்லியில் நாளை காவிரி நீர் மேலாண்மை ஆணைய 51வது கூட்டம்
சென்னை, 25 மே (ஹி.ச.) காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. முன்னதாக மே 28ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தை முன்கூட்டியே நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. காவிரி நீர் மேல
காவிரி


சென்னை, 25 மே (ஹி.ச.)

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.

முன்னதாக மே 28ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூட்டத்தை முன்கூட்டியே நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹெல்தர் தலைமையில், HYBRID முறையில் டெல்லியில் உள்ள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், காவிரியின் குறுக்கே உள்ள ஹரங்கி அணையில் நீர் தேக்குவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அதேபோல், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவு மற்றும் இதுகுறித்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றியும் ஆலோசனை நடைபெற உள்ளது.

மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் வானிலை சூழல், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகளின் நீர் இருப்பு உள்ளிட்ட தரவுகளின் அடிப்படையிலும் விரிவான ஆய்வு மற்றும் விவாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P