சென்னை விமான நிலையத்தில் அடிதடி - இருவர் கைது
சென்னை, 25 மே (ஹி.ச.) சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிகள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான ந
Chennai International Airport


சென்னை, 25 மே (ஹி.ச.)

சென்னையிலிருந்து கோலாலம்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிகள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்ல இருந்த விமானத்தில், மலேசிய நாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களான நந்தகுமார் (35), பிரசாந்த் (36) ஆகியோர் பயணம் செய்ய வந்திருந்தனர்.

விமானத்தில் ஏறும் முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இருவரையும் விமானத்திலிருந்து கீழிறக்கினர்.

தொடர்ந்து விமான நிலைய போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

மேலும் பாதுகாப்பு காரணங்களால் இருவரின் விமான பயணங்களும் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் கோலாலம்பூர் செல்ல இருந்த விமானம் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

விமான நிலையத்தில் பயணிகள் மத்தியில் ஏற்பட்ட இந்த திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / ANANDHAN