PM-SHRI திட்டத்தை அமல்படுத்தக் கோரி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி - உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை,25 மே (ஹி.ச.) PM-SHRI திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ
High court


சென்னை,25 மே (ஹி.ச.)

PM-SHRI திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசின் இருமொழிக் கொள்கை காரணமாக மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய கல்விக் கொள்கை மூலம் கிடைக்க வேண்டிய ரூ.2,100 கோடி நிதி, தமிழக அரசின் தவறான முடிவால் கிடைக்கவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே 31ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி அளித்த மனுவை பரிசீலிக்க, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ