கோவை சிறுமி வழக்கில் முதலமைச்சர் சட்டத்துறைக்கு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளார் - அமைச்சர் செங்கோட்டையன்
கோவை, 25 மே (ஹி.ச.) கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை கடந்த எட்டு மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். வழக்கமாக ஆறு மாதத்திற்
Sengottaiyan


கோவை, 25 மே (ஹி.ச.)

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

என்னைப் பொருத்தவரை கடந்த எட்டு மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன்.

வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் ‘மாஸ்டர் செக்-அப்’ சிகிச்சை செய்து கொள்வது வழக்கம். ஆண்டுக்கு இரண்டு முறை உடல்நிலை பரிசோதனை செய்து கொள்வேன்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது. கே.எம்.சி.எச் மருத்துவமனை உறவினர்களுடைய மருத்துவமனை. ஓய்வெடுக்க வேண்டும் என்றால் அங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நான் காலை நேரத்தில் வரும்போது அங்குள்ள விடுதியில் தான் தங்குவேன்” என்றார்.

தொடர்ந்து சிறுமி கொலை வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

இந்த விவகாரம் குறித்து ஐஜி ரம்யா பாரதி விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சரும் சட்டத்துறைக்கு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,

திமுக அந்த திட்டத்தை எப்படி வழங்கியது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு திட்டமும் மாநிலத்தின் நிதிநிலைக்கு ஏற்ப தான் செயல்படுத்தப்படும். அதுகுறித்து இறுதி முடிவை முதலமைச்சர் தான் எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN