தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 6 வயது சிறுவன் - தீவிர தேடுதல் பணி
ஈரோடு, 25 மே (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஏற்பட்ட கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு மீட்புத்துறையினர் மற்றும
நீரில் மூழ்கி


ஈரோடு, 25 மே (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஏற்பட்ட கனமழையால் உருவான காட்டாற்று வெள்ளத்தில் 6 வயது சிறுவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு மீட்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தாளவாடி அருகே உள்ள திகினாரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஓடைகளில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், திகினாரை கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் 6 வயது மகன் மதன் கார்த்திக் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆசனூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், தாளவாடி காவல்துறையினருடன் இணைந்து சிறுவனை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

காட்டாற்று வெள்ளத்தில் சிறுவன் மாயமான சம்பவம், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் கவலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P