Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை , 25 மே (ஹி.ச.)
19-வது (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. ஜெய்ஸ்வால் 27 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் துரு ஜுரல் (38) மற்றும் தாசன் சங்கரா (29) ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மேலும் ஆர்ச்சர் 32 ரன்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் சாஹர், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
206 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்தார்.
ஹர்திக் பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக பங்களிக்காததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA