Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர்,
விஜய் முதலமைச்சராக வந்தால் தான் மக்களுக்கு சுபிட்சம் கிடைக்கும் என இறைவன் நினைத்துவிட்டார் என்று தெரிவித்தார்.
மேலும், மக்கள் தனக்காக வாக்களிக்கவில்லை; விஜய்க்காகத்தான் வாக்களித்துள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
ஆட்சி மற்றும் அதிகாரம் கிடைத்துவிட்டது என்பதற்காக கட்சியினர் ஆணவமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும், மக்கள் நம்பிக்கையை காக்கும் வகையில் பணிவுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தளபதிக்கு இருக்கிற அறிவும், ஆற்றலும் வேறு எந்த கட்சித் தலைவருக்கும் இல்லை எனக் கூறிய ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சர் விஜயின் தலைமையை பாராட்டினார்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற இந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், கட்சியினருக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் பொறுப்புணர்வு குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
Hindusthan Samachar / GOKILA arumugam