Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 மே (ஹி.ச.)
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை என்பவர் ஒரு புகழ்பெற்ற தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இதழாசிரியர் ஆவார்.
தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட நாகரிகத்தின் சிறப்பையும் உலகறியச் செய்தவர்களில் இவரும் ஒருவர்.
மே 25, 1866 அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற கிராமத்தில் பிறந்தார்.
சென்னை கிறித்துவக் கல்லூரி மற்றும் பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
பரிதிமாற்கலைஞருடன் இணைந்து 'ஞானபோதினி' என்ற தமிழ் இதழைத் திருத்தி வெளியிட்டார்.
மேலும் 'தமிழர்' என்ற இதழையும் நடத்தினார்.
தமிழ் மொழியின் பெருமையை ஆங்கிலேயர்களும் பிற மொழியினரும் அறியும் வகையில், முதன்முதலில் ஆங்கிலத்தில் முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை (Tamil Literature)எழுதினார்.
இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
மேலும், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார்.
சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை 1947ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J