Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மே (ஹி.ச.)
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
25 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையிலே குடியிருந்த நான் பலமுறை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறேன்.
இந்த விமான பயணமும் உங்களை சந்திக்கும் நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான நாள்.
காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் என்னை அழைத்து பொதுத் தொகுதியில் என்னை போட்டியிட வைத்தார்.
வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சி உரைத்தது வெற்றி பெற்ற பிறகு மீனாட்சி பட்டணத்தில் நான் உயர்கல்வித்துறை அமைச்சராக வந்திருக்கிறேன்.
எனக்கு கொடுத்திருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமான பொறுப்பு. 2009ல் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து பாராளுமன்றம் சென்றபோது முதல் நாடாளுமன்றத்தில் எனது பேச்சுக்கு உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர், கல்விக் கொடுத்தோர் கடவுளுக்கு சமமானவர் என்று எனது முதல் பேச்சு அமைந்திருந்தது.
உயர் கல்வி எங்கள் துறையை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வருக்கு எங்கள் நன்றி, பாராட்டு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்விகளை கேட்பதைவிட உங்கள் நண்பன் சகோதரன் தோழன் வந்திருக்கிறேன் வெற்றி பெற்ற கக்கனுக்கு பின்னால் அந்தத் தொகுதியில் 67 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வெற்றி பெற்று அமைச்சராக வந்திருக்கிறேன். இந்த வெற்றியை நாம் தியாக சில எளிமையின் சிகரம் கக்கன் அவர்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
கவர்னரை எதிர்கொள்வது குறித்த கேள்விக்கு,
எல்லா அமைச்சரும் கவர்னரை எதிர்கொண்டு இருக்கிறார்கள். எனக்கும் அந்த துணிவு ஆற்றல் இருப்பதாக கருதுகிறேன். வல்லுனர்களுடன் கலந்து உபயோகிக்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நிச்சயமாக கவர்னர் அவர்களை எதிர்கொள்வேன் என்பதைவிட நான் கவர்னர் அவருடன் மிக சரியான முறையில் கருத்து அவருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்த சேர்க்க முடியுமா அந்த முயற்சியை நான் எடுப்பேன்.
மேகதாதுவின் நிலைப்பாடு என்பது காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் தெளிவாக சொல்லியிருக்கிறது. அணை கட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும் தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது. காங்கிரஸ் அமைச்சர் என்கிற முறையில் நானும் முதல்வரும் தெளிவாக இருக்கிறோம்.
நீட் விவகாரம்? தற்போது தான் வந்திருக்கிறார், அவகாசம் தேவைப்படும். நீட் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் இன்னமும் ராகுல் காந்தியின் எண்ணமும் அதுதான்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் குறித்த கேள்விக்கு,
இப்போதுதான் அமைச்சராக பொறுப்பேற்று வந்திருக்கிறேன், உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்கிறேன். எங்கெல்லாம் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா அதையெல்லாம் செய்வோம்.
ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். அரசியல் கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவர்கள் மாறவேண்டும், மாற்றப்பட வேண்டும்.
இல்லை என்றால் மாற்றுவதற்கு வழியை கண்டுபிடித்து வைத்திருக்கிறோம் எனக் கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN