Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 25 மே (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சிக்குட்பட்ட சந்தப்பேட்டையில் உள்ள கால்நடைச் சந்தையில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த முறை பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதனால் கலை கட்டிய சந்தையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளும் ஆட்டுத்தலைகளும் ஆக காணப்பட்டன.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆட்டுச் சந்தையில் கீழையூர், கீழவளவு, தும்பைபட்டி, மேலவளவு, பாப்பாகுடிபட்டி, அட்டப்பட்டி, காடம்பட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, சேக்கிபட்டி, திருவாதவூர் உள்ளிட்ட மேலூர் பகுதியின் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது கால்நடை வளர்ப்புகளான ஆடு மற்றும் கோழிகளை விற்பனைக்காக அதிக அளவில் கொண்டு வந்திருந்தனர்.
அதேபோல் மதுரை மாவட்டம் மட்டுமல்லாது நத்தம், துவரங்குறிச்சி, கரூர்,சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு திண்டுக்கல்,தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்வதற்காக வந்திருந்தனர்.
இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நடைபெறுவதை முன்னிட்டு இன்று ஏராளமான இஸ்லாமிய சகோதரர்களும் உள்ளூர் வியாபாரிகளும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வதற்காக வந்திருந்தனர்.
மேலும் ஆடுகள் நல்ல விலைக்குப் போகும் என்பதால் விவசாயிகளும் அதிகப்படியான ஆடுகளை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த முறை கிடாய்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் ஆடுகளின் விலை ஒரு கிலோவிற்கு 1000 ரூபாயிலிருந்து ரூபாய்1500 வரைக்கும், ஆட்டுக்கிடாய் 25,000 ரூபாயிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை வர்த்தகமானது சுமார் 3 கோடி வரை நடைபெற்றுள்ளது.
விவசாயிகளை பொருத்தமட்டிலும் ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியோடு சென்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும் பண்டிகைக்காக அதிகப்படியான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN