அரசியல் தலையீடு இல்லாமல் காவல்துறை செயல்படும் - அமைச்சர் அருண் ராஜ்
சென்னை, 25 மே (ஹி.ச.) குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவித அழுத்தமும் இன்றி, உரிய காலத்தில் சட்டப்படியான தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் அருண் ராஜ் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
Minister Arun Raj


சென்னை, 25 மே (ஹி.ச.)

குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எந்தவித அழுத்தமும் இன்றி, உரிய காலத்தில் சட்டப்படியான தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் அருண் ராஜ் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

குற்றங்கள் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் முன் தண்டனை வாங்கித் தருவதே எங்கள் நோக்கம். இதில் அரசியல் அழுத்தமோ, வேறு எந்த தலையீடோ இருக்காது.

இத்தனை ஆண்டுகளாக காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு அரசியல் தலையீடு பெரும் தடையாக இருந்தது.

கடந்த காலங்களில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக காவல்துறையால் முழுமையாக செயல்பட முடியவில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதற்கு போதைப் பொருள் பயன்பாடே முக்கிய காரணம்.

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதால், அதன் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொதுமக்கள் அச்சமின்றி வாழ சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், குற்றச் செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க மக்கள் தயங்காமல் முன்வர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அருண் ராஜ் பேசியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b