Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மே (ஹி.ச.)
மேகதாது அணைக்கட்டும் விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை சார்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் சட்டமன்ற அலுவலகத்தை அமைச்சர் என்.ஆனந்த் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, தொகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச குக்கர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக இன்று 11 பேருக்கு குக்கர்களை வழங்கினார்.
மேலும், தொகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆன்லைன் மூலம் தெரிவிக்க புதிய செயலியையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.
அப்போது, மேகதாது அணை தொடர்பாக இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
முதலமைச்சருடன் அதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், துறை சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ