உணவுத்துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் வெங்கட்ரமணன் தகவல்
தமிழ்நாடு, 25 மே (ஹி.ச.) தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெ
அமைச்சர் வெங்கட்ரமணன்


தமிழ்நாடு, 25 மே (ஹி.ச.)

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

உணவு வழங்கல் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

ரேஷன் பொருட்கள் தொடர்பான டெண்டர்கள் தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் வழங்கப்படாது என்றும், தரமான பொருட்களை வழங்கும் நிறுவனங்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் ஒப்பந்தங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோல், லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை உடனடியாக கவனித்து தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பல்வேறு ஊழியர் மற்றும் தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் ஆலோசனையுடன் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam