மரக்காணம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் - முதல்வர் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்
சென்னை, 25 மே (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
நயினார்


சென்னை, 25 மே (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து, தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

கோவை சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி விரைவில் உடல் மற்றும் மனநலத்துடன் மீண்டு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் அவலங்கள் தொடர்கின்றன என குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாநிலத்தில் நடைபெறும் பிரச்சினைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P