பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மார்க்சிஸ்ட் சண்முகம் கண்டனம்
சென்னை, 25 மே (ஹி.ச.) இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ம் முறையாக உயர்ந்து உள்ளது. இன்று பெட்ரோல் ரூ.2.46, டீசல் ரூ.2.57 உயர்ந்து முறையே ரூ.107.77, ரூ.99.55-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.7.2, டீசல்
CPIM Shanmugam


சென்னை, 25 மே (ஹி.ச.)

இந்தியாவில் கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4ம் முறையாக உயர்ந்து உள்ளது.

இன்று பெட்ரோல் ரூ.2.46, டீசல் ரூ.2.57 உயர்ந்து முறையே ரூ.107.77, ரூ.99.55-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.7.2, டீசல் விலை ரூ.7.38 உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அடுத்தடுத்து உயரும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பிறகு 4வது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில்,

பெட்ரோல்- டீசல் விலையை இரண்டு வாரங்களில் நான்கு முறை உயர்த்தி உள்ளது ஒன்றிய பாஜக அரசு. இன்று பெட்ரோல் ரூ 107.77 டீசல் ரூ 99.55.

இதில் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல மத்திய - மாநில அரசுகள் வரிமூலம் வருவாயாக பெறுவது மட்டும் 50 சதவீதம்.

உங்களால் சர்வதேச சந்தையில் விலையை குறைக்க முடியாது. அமெரிக்கா- ஈரான் சண்டையை நிறுத்த முடியாது. விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?

அரசுக்கு வரும் வரி வருவாயில் இருந்து மக்களுக்கு விலையை குறைத்து நிவாரண வழங்க மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN