Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 25 மே (ஹி.ச.)
தென்காசி மாவட்டம் தமிழக–கேரள எல்லைப் பகுதியான புளியரை வழியாக சட்டவிரோத கனிமவள கடத்தல் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கனிமவளத்துறை அமைச்சர் பிரபு நள்ளிரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட நிர்வாகத்திற்கு முன்தகவல் எதுவும் வழங்காமல் நேரடியாக புளியரை வாகன சோதனைச் சாவடிக்கு வந்த அமைச்சர், கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் பதிவுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து அருகிலுள்ள எடை மேடை நிலையங்களிலும் திடீர் சோதனை நடத்தி நிலவரத்தை கேட்டறிந்தார்.
சட்டவிரோத கனிமவள கடத்தலை முழுமையாக தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நள்ளிரவில் நடைபெற்ற இந்த சர்ப்ரைஸ் ஆய்வு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P