பழிக்குப்பழியாக நடந்த கொலை - ஓராண்டு கழித்து மீண்டும் ஒரு கொலை சம்பவத்தை அரங்கேற்ற நினைத்த கும்பல்
சிவகங்கை, 25 மே ( ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி சேர்ந்தவர் குரு பாண்டியன் மற்றும் பாலமுருகன்- கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்த கொலை சம்பவம் ஒன்றில் சிறையில் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நாள்தோறும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கை
கொலை


சிவகங்கை, 25 மே ( ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதி சேர்ந்தவர் குரு பாண்டியன் மற்றும் பாலமுருகன்- கடந்த ஓராண்டுக்கு முன்பு நடந்த கொலை சம்பவம் ஒன்றில் சிறையில் இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நாள்தோறும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது.

இதற்கிடையே சற்று நேரத்திற்கு முன்பு குரு பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் இருவரும் தனது உறவினர்கள் இருவருடன் காரில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு சென்று உள்ளனர்.

செல்லும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - சேலம் சாலை ரவுண்டானா பகுதியில் குரு பாண்டியன் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் திடீரென அவரது காரை வழிமறித்து பட்டாகத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.

அப்போது சுதாரித்துக் கொண்ட குரு பாண்டியன் தரப்பினர் காரை நிறுத்தாமல் மடக்கி மீண்டும் உளுந்தூர்பேட்டைக்கு தப்பித்து வந்தனர்.

தங்களது திட்டம் தோல்வி அடைந்த நிலையில் குரு பாண்டியன் மற்றும் அவரது தம்பி பாலமுருகன் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் வந்தவர்கள் ஒரு இருசக்கர வாகனத்தை மட்டும் அங்கே போட்டுவிட்டு இன்னொரு காரில் தப்பி ஓடினார்.

இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொலை செய்யும் நோக்கில் வந்த கும்பலை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் நடந்த சம்பவம் குறித்து குருபாண்டியன் மற்றும் அவர்கள் தம்பியிடம் உளுந்தூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam