திமுக, அதிமுக இணைந்து பதவிக்கு வருவதற்கு பாஜக உதவியது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன் - தமிழிசை சௌந்தர்ராஜன்
தூத்துக்குடி, 25 மே (ஹி.ச.) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மாணிக்கம் தாகூருக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினார். தொடர்ந்து, உங்களுக்கு பதவி ஆசை. அதுனால உடனே ஓடிப
Tamilisai Soundararajan


தூத்துக்குடி, 25 மே (ஹி.ச.)

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் , மாணிக்கம் தாகூருக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

தொடர்ந்து, உங்களுக்கு பதவி ஆசை. அதுனால உடனே ஓடிப்போய் பின்வாசல் வழியாக பதவியில் ஓட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.

காங்கிரஸ் தனியாக அமைச்சர் ஆவதற்கு இந்த உலகம் இருக்கிற வரைக்கும் வாய்ப்பே கிடையாது என விளாசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

நீங்க திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளின் தோளில் ஏறி வெற்றி பெற்றீர்கள். ஆனால் இன்னைக்கு திமுக, அதிமுக இணைந்து பதவிக்கு வருவதற்கு பாஜக உதவியது என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இன்றில் இன்று ஆட்சியை பற்றி பேசும் மாணிக்கம் தாகூரின் தலைவர் ராகுல் காந்தி, பாஜக ஆட்சி ஒரு வருஷத்தில் கவிழும் என்கிறார்.

அவர் கனவு காண வேண்டும். மறுபடியும் மறுபடியும் பாஜக தான் ஜெயிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

மேலும், விசிக மீது பல விமர்சனங்களை பிரஸ் மீட்டில் வைத்திருக்கிறார். அதாவது, தேர்தலுக்கு முன்பாக விஜய்யை ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என்றார். இன்னைக்கு அவுங்க கையை வைத்தே கண்ணை குத்தி கொண்டார்கள். இன்னைக்கு அவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைத்து இருக்கிறார்கள்.

ஆட்சி, அதிகாரத்தில் ஆசை இல்லை என்றால் வெளியில் இருந்து ஆதரவு தர வேண்டியது தானா? ஏன் எல்லாரும் அமைச்சரானீர்கள் என்ற கேள்வியை முன்வைத்தார்

எந்த நிலைப்பாடும் இந்த அரசாங்கத்துக்கு கிடையாது. தினமும் ஆட்டம் காணக்கூடிய அரசாங்கமாக தான் இந்த அரசாங்கம் இருக்க போகிறதோ என்ற அச்சம் இருப்பதாகவும் தமிழிசை விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN