திருப்பரங்குன்றம் மலை அளவீட்டு பணி தீவிரம்- தொல்லியல், வருவாய் துறைகள் ஆய்வு
மதுரை, 25 மே (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறை இணைந்து அள
திருப்பரங்குன்றம்


மதுரை, 25 மே (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலையையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தொல்லியல் துறை மற்றும் வருவாய் துறை இணைந்து அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, ஆர்.டி.ஓ ஜீவஜோதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், வி.ஏ.ஓ சக்தி மற்றும் சர்வேயர்கள் குழுவினர் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி மற்றும் மலைச் சுற்றுப்பகுதிகளில் அளவீட்டு பணிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், மத்திய தொல்லியல் துறை சார்பிலும் பொறியாளர் உமேஷ் தலைமையில் ஆய்வு மற்றும் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தயாராகும் இந்த அறிக்கை, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P