தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - 410 மனுக்கள் பெறப்பட்டன
சென்னை, 25 மே (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ள
Gg


சென்னை, 25 மே (ஹி.ச.)

தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டம், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவர்களிடமிருந்து 23 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.14,160 மதிப்பிலான விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் ரமணன் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / P YUVARAJ