Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 மே (ஹி.ச.)
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2026–27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது.
பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், வரும் ஜூன் 17ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை மற்றும் தேனி வீரபாண்டி உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச்) படிப்புக்கு மொத்தம் 660 இடங்கள் உள்ளன.
மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், பி.வி.எஸ்சி.-ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P