விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அமைச்சர் பார்த்திபன் ஆய்வு
சென்னை, 25 மே (ஹி.ச.) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இன்று ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து துறைக்கு பொதுமக்களிடமிருந்து வந்துள்ள புகார்கள், அவற்றில் எத்தனைக்கு தீர்வு காணப்பட்ட
Bh


சென்னை, 25 மே (ஹி.ச.)

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து துறைக்கு பொதுமக்களிடமிருந்து வந்துள்ள புகார்கள், அவற்றில் எத்தனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பேருந்து நடத்துனர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், பேருந்து ஓட்டுநர்கள் நிறுத்தங்களில் முறையாக நிறுத்துவதில்லை என்றும் பல புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பொதுமக்களிடம் பொறுப்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும், வாகனங்கள் மற்றும் பணிமனைகளை சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

பேருந்துகளை பழுது பார்க்கும் மெக்கானிக்குகள் வாகனங்களை பொறுப்புடன் பராமரித்து, தரமாக பழுது பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் பார்த்திபன் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / P YUVARAJ